12th Tamil Study Hub

📜 12ஆம் வகுப்பு தமிழ் திருக்குறள்

12ஆம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான திருக்குறள்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு, காலாண்டுத் தேர்வு மற்றும் மீள்பார்வைக்குத் தேவையான திருக்குறள்களை எளிதாகப் படிக்கலாம்.

🎯 விரைவு வழிசெலுத்தல்

  • 📖 அனைத்து திருக்குறள்கள்
  • ⭐ முக்கியமான திருக்குறள்கள்
  • 📝 தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் திருக்குறள்கள்
  • 🎯 விரைவு மீள்பார்வை
  • 📚 பொதுத்தேர்வு தயாரிப்பு

📜 12ஆம் வகுப்பு தமிழ் திருக்குறள்கள்

📚 திருக்குறள் தொகுப்பு – Set 1

1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

3. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

4. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று.

5. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

6. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

7. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

8. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.

error: Content is protected !!
Scroll to Top
🔗
Link copied!